வடக்கு பெல்ஜியத்தின் புகென்ஹவுட் நகரில், பாடசாலை மினிபஸ்ஸொன்று ரயிலுடன் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 12, 15 வயதுடைய இரண்டு சிறுவர்களும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தப் பஸ் ரயிலில் மோதி விபத்துக்கு உள்ளாகும் போது 07 சிறுவர்களும் 49 வயதுடைய சாரதியும் 27 வயதுடைய ஒரு பாதுகாவலரும் இருந்துள்ளனர் எனவும் அவர்கள் கூறினர்.
பஸ்ஸில் இருந்த ஏனைய ஐந்து சிறுவர்களும் மருத்துவமனையில் கவலைக்கிடமான, ஆனால் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அரச வழக்கறிஞர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் ஆன் பெர்கர் கூறுகையில், அந்தப் பஸ் வண்டி ஒரு விஷேட கல்விப் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த சமயமே இந்த துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரயில் பாதைக்கு இணையாக இருந்த ஒரு தெருவில் அந்த மினிபஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது தடுப்பு ஏற்கனவே கீழே இறக்கப்பட்டிருந்த நிலையில், சாரதி இடதுபுறம் திரும்பி குறுக்கு தெருவில் பஸ்ஸை செலுத்தியுள்ளார். அச்சமயம், பக்கென்ஹவுட் என்ற சிறிய நகரம் வழியாகச் சென்று கொண்டிருந்த ரயில், அந்த மினிபஸ் மீது மோதுண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பி.பி.சி



