அதிக வருவாய் ஈட்டுபவராக ரொனால்டோவுக்கு முதலிடம்

1 Min Read

கடந்த 2025ஆம் ஆண்டில் 300 மில்லிய் டொலர் வருவாய் ஈட்டிய போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

போர்த்துக்கல் அணியின் தலைவராக உள்ள ரொனால்டோ, சவூதி அரேபியாவைச் சேர்ந்த அல் நாஸர் கால்பந்து அணியின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டில் அவரது வருவாய், 300 மில்லியன் டொலராகும். இதன் மூலம், ஃபோர்ப்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்ட, அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மெக்சிகோவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் கேனெலோ அல்வாரஸ், கடந்த ஆண்டில் 170 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டி, ஃபோர்ப்ஸ் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

அர்ஜென்டீனாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லயனல் மெஸ்ஸி, 140 மில்லியன் டொலர் வருவாயுடன் 3ஆம் இடம் பெற்றுள்ளார். இருப்பினும், மெஸ்ஸியின் வருவாய், ரொனால்டோவை ஒப்பிடுகையில் பாதிக்கும் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர, அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ், 137 மில்லியன் டொலர் வருவாயுடன் நான்காவது இடத்தையும், ஜப்பானைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் ஷோஹெய் ஒஹ்டானி 127 மில்லியன் டொலர்களுடன் 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட, அதிக வருவாய் ஈட்டிய முதல் 10 வீரர்கள் பட்டியலில் கால்பந்து வீரர்கள், கூடைப்பந்து வீரர்கள் தலா 3 பேர், பேஸ்பால், ஒட்டோ ரேஸிங், கொல்ஃப், குத்துச் சண்டை ஆகிய துறைகளை சேர்ந்த தலா ஒரு வீரர் இடம்பெற்றுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *