நாளை வெளியாகும் +2 தேர்வு முடிவுகள் – வாட்சப் மூலமே தெரிந்து கொள்ளலாம்

1 Min Read

+2 தேர்வு முடிவுகளை வாட்சப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

+2 தேர்வு முடிவுகள்

தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 2 ஆம் திகதி தொடங்கி மார்ச் 26 ஆம் திகதி வரை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இந்த தேர்வை தனித்தேர்வர்கள் உட்பட சுமார் 8 லட்ச மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர்.

நாளை வெளியாகும் +2 தேர்வு முடிவுகள் - வாட்சப் மூலமே தெரிந்து கொள்ளலாம் | Tamil Nadu 12Th Exam Result Can Check In Whatsapp

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 6ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை விடைத் தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று முடிந்தன.

தமிழ்நாட்டில் புதிய அரசு அமைய உள்ள சூழலில், புதிய அரசு அமைந்த பின்னரே தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்கள் பரவியது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி நாளை(08.05.2026) காலை 9;30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

எப்படி பார்ப்பது?

தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in இணையதளங்களில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம். மேலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தெரிந்து கொள்ளலாம்.

நாளை வெளியாகும் +2 தேர்வு முடிவுகள் - வாட்சப் மூலமே தெரிந்து கொள்ளலாம் | Tamil Nadu 12Th Exam Result Can Check In Whatsapp

இந்நிலையில், முதல்முறையாக வாட்சப் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வசதியை தேர்வுகள் இயக்குநரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

78452 52525 என்ற எண்ணுக்கு துறை மற்றும் வகுப்பு விபரங்கள் அனுப்பிய பின்னர் பதிவு எண் மற்றும் பிறந்த திகதி அனுப்பி முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *