Google Translate தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவு

1 Min Read

20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த சேவை, தற்போது 250 மொழிகளை ஆதரிக்கிறது.

மாதத்திற்கு 1 பில்லியன் மக்கள், சுமார் 1 டிரில்லியன் வார்த்தைகளை மொழிபெயர்க்க இந்த தளத்தைப் பயன்படுத்துகின்றனர்.2016-ல் neural machine translation முறைக்கு மாறியதால், முழு வாக்கியங்களை ஒரே நேரத்தில் மொழிபெயர்க்கும் திறன் கிடைத்தது.

இதனால் மொழிபெயர்ப்பின் துல்லியமும், இயல்பும் அதிகரித்தது. இப்போது, மேம்பட்ட AI Model-கள் மூலம் சூழல், சொற்றொடர்கள், பிராந்திய நுணுக்கங்கள் ஆகியவற்றை புரிந்து கொண்டு, இயல்பான பேச்சு வழக்கிலும் மொழிபெயர்ப்பை வழங்குகிறது.

சமீபத்தில், உச்சரிப்பு பயிற்சி மற்றும் நேரடி உரையாடல் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

Google Translate, உலகம் முழுவதும் மொழி தடைகளை உடைத்து, கல்வி, வணிகம், பயணம், மற்றும் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *