மும்பை இந்தியன்ஸின் சவாலான வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய சன்ரைசஸ் ஹைத்ராபாத் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. சொந்த மைதானத்தில் அதிக ஓட்டங்களை குவித்தும் மீண்டும் ஒருமுறை மும்பையால் வெற்றியை எட்ட முடியாத நிலையில் அந்த அணி 9 ஆவது இடத்தில் மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது.
மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் (29) நடந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணிக்கு ஆரம்ப வீரர் ரியான் ரிக்கல்டன் 55 பந்துகளில் 122 ஓட்டங்களை விளாசினார். இது ஐபிஎல் வரலாற்றில் மும்பை வீரர் ஒருவரின் அதிகூடிய ஓட்டங்களாகவும் இருந்தது. இதன்மூம் அந்த அணி 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது.
எனினும் பதிலெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைத்ராபாத் 18.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இலகுவாக அந்த வெற்றி இலக்கை எட்டியது. குறிப்பாக ஆரம்ப விக்கெட்டுக்கு அபிஷோக் ஷர்மா (45) மற்றும் டிரவிஸ் ஹெட் (70) 129 ஓட்டங்களை விளாசினர்.
மும்பை அணி சார்பில் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜெஸ்பிரிட் பும்ரா மீண்டும் ஒருமுறை சோபிக்கத் தவறினார். பும்ரா இம்முறை தொடரில் இதுவரை எட்டுப் போட்டிகளில் ஆடியும் 2 விக்கெட்டுகளையே வீழ்த்தியுள்ளார்.



