30 ஆண்டுகளின் பின் இணைந்த சனி- புதன் : ராஜ வாழ்க்கை வாழப்போகும் டாப் 3 ராசிகள்!

Karan
By
Karan
2 Min Read

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரங்களில் சனி பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் சனி பகவான் நீதியின் கடவுளாக அறியப்படுகின்றார்.

இவர் ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு அவ்வப்போது அதற்கான கரும பலனை கொடுத்துவிடுவார். இவர் நீதியின் விடயத்தில் யாருக்கும் பாகுபாடு காட்டுவதே கிடையாது.

அதனால் சனி பெயர்ச்சி என்றாலே பலருக்கும் ஒரு அச்ச உணர்வு ஏற்படுவது இயல்பு. அந்தவகையில், ஏப்ரல் 11 அன்று புதன் மீன ராசிக்குள் சனி பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது.

மீன ராசியில் ஏற்கனவே புதன் பகவான் இருப்பதால், கிட்டத்தட்ட இந்த இணைப்பு சுமார் 30 ஆண்டுகளின் பின்னர் நிகழ்ந்துள்ளது. இந்த அரிய கிரகச் சேர்க்கை ஜோதிடரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகின்றது.

இந்த இணைப்பின் விளைவால் அனைத்து ராசியினரின் வாழ்விலும் குறிப்பி்டத்தக்க சாதக பாதக மாற்றங்கள் நிகழ்ந்தாலும், பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியில் உச்சகட்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

30 ஆண்டுகளின் பின் இணைந்த சனி- புதன் : ராஜ வாழ்க்கை வாழப்போகும் டாப் 3 ராசிகள்! | Saturn Mercury Conjunction Who Get Huge Luck

ரிஷபம்

30 ஆண்டுகளின் பின் இணைந்த சனி- புதன் : ராஜ வாழ்க்கை வாழப்போகும் டாப் 3 ராசிகள்! | Saturn Mercury Conjunction Who Get Huge Luck

இந்த கிரக சேர்க்கையால் ரிஷப ராசியினரின் வருமானத்தில் கணிசமான உயர்வு உண்டாகும். இவர்களின் வங்கி வைப்புப்பணம் அசுர வேகத்தில் வளர்ச்சிக்கான போகின்றது.

ரிஷபத்தின் 11 ஆவது வீட்டில் இந்த கிரக சேர்க்கை நிகழ்ந்துள்ளதால், லாப ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்துள்ளார். அதனால் இவர்களின் தொழில் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

இவர்களின் வாழ்வில் இதுவரை காலமும் இருந்துவந்த பிரச்சினைகள் அனைத்தும், குறிப்பாக தீர்க்கவே முடியாது என நினைத்த பிரச்சினைகள் கூட மிக சுலமாக தீரும்.

மிதுனம்

30 ஆண்டுகளின் பின் இணைந்த சனி- புதன் : ராஜ வாழ்க்கை வாழப்போகும் டாப் 3 ராசிகள்! | Saturn Mercury Conjunction Who Get Huge Luck

மிதுன ராசியின் ஆளும் கிரகமாக புதன் இருப்பதால் இந்த சனி புதன் சேர்க்கையானது இந்த ராசியினருக்கு சிறந்த அறிவாற்றலையும், தைரியத்தையும் கொடுக்கப்போகின்றது.

இவர்களின் தொழில் வாழ்க்கையில் அமோக முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டுவார்கள்.

இந்த பெயர்ச்சியானது அவர்களின் தொழில் மற்றும் வியாபாரத் துறைகளில் புதிய வாய்ப்புகளையும், வருமானத்துக்கான வழிகளையும் திறக்கும்.

தனுசு

30 ஆண்டுகளின் பின் இணைந்த சனி- புதன் : ராஜ வாழ்க்கை வாழப்போகும் டாப் 3 ராசிகள்! | Saturn Mercury Conjunction Who Get Huge Luck

தனுசு ராசியினருக்கு இந்த சனி புதன் சேர்க்கையால், நிதி நிலைளில் அசுர வளர்ச்சி உண்டாகப்போகின்றது.

குறிப்பாக தொழில் வாழ்க்கையில் இதுவரையில் இருந்து வந்த பிரச்சிகைள் நீங்கும். சக ஊழியர்களுடான உறவு சுமூகமாக இருக்கும்.

புதன் ஆசியால், இந்த காலகட்டத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், அவர்களின் நினைவாற்றல் மேம்படும். சனியின் கனிவான பார்வையால் இவர்களின் நிதி நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு உண்டாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *