குழந்தைகள் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா..!
குழந்தை உருவம் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். கனவு என்பது இரவில் உறங்கும் போது மனத்திரையில் வருவது என்பதாகும். கனவு தோன்றும் அன்றைய நாளில் மிகவும் உள் மனதில் பதிந்த ஒன்று கனவாக வெளிப்படும் என்கிறார்கள்.
கனவின் மூலமாக எது வெளிப்பட்டாலும் அதற்கு ஒரு அர்த்தமும், கனவில் தோன்றியதில் இதுதான் நடக்க போகிறது என்ற யூகத்தினை முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். கனவில் வந்த விஷயத்தினை நமக்கு மறைமுகமாக விளக்கி காட்டும். சரி வாங்க நண்பர்களே இப்போது குழந்தை உருவம் கனவில் வந்தால் என்ன பலன்?

குழந்தை உருவம் கனவில் வந்தால் கண்டிப்பாக நன்மை நிறைந்த செயல்கள் நடக்கும். குழந்தைகள் கனவில் வந்தால் வரவுகள் அதிகமாக வரும். வேலை இல்லாமல் சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு குழந்தை உருவம் கனவில் வந்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
உடல் நோயால் மிகவும் அவதிப்படுவோர் குழந்தை உருவத்தினை கனவில் கண்டால் கண்டிப்பாக நோயிலிருந்து விடுபடலாம். குழந்தைகள் கனவில் தோன்றினால் இடம் அல்லது வீட்டிற்கு பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் வரும். குழந்தை கனவு வந்தால் பதவி உயர்வு கிடைக்கும்.
புதிதாக வீடு அமையும் வாய்ப்பு குழந்தை கனவில் தோன்றினால் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காதவர்களுக்கு குழந்தை உருவம் வந்தால் கண்டிப்பாக உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வாழ்க்கையில் எப்போதும் துன்பத்தினை சந்திப்பவர்களுக்கு குழந்தை கனவில் வந்தால் இன்பங்கள் பிறக்கும்.
அடுத்து நாம் உறங்கும் போது குழந்தை கனவில் அழுவது போன்று வந்தால் சிறிய பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகள் அழுவது போன்று கனவில் தோன்றினால் உடலில் ஏதேனும் நோய்கள் வருவதற்கான அறிகுறியாகும். அடுத்து தேவையற்ற செலவுகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும். மேலும்செய்யாத காரியத்திற்கு பழியினை ஏற்றுக்கொள்வது போன்று வரும்.
கைக்குழந்தை கனவில் வந்தால்:
கைக்குழந்தை கனவில் வந்தால் கண்டால் சுபச் செயல்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது. கைக்குழந்தை கனவில் வந்தால் உடல்நல பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று அர்த்தம்.
குழந்தைகள் விளையாடுவது போல் கனவு வந்தால்:
இது ஒரு ஒரு நல்ல கனவாகும். இது மேலும் பொன் பொருள் சேர்க்கை, தன வரவு திருப்தி தரும் என்பதை குறிப்பிடுகிறது. செய்யும் தொழிலில் அதிக லாபம் ஈட்டப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
குழந்தையை அடிப்பது போல் கனவு கண்டால்:
நீங்கள் செய்யும் வேலை அல்லது தொழிலில் உங்களுக்கு விருப்பமில்லாத தன்மையை குறிக்கிறது. எனவே நீங்கள் உங்களுக்கு தகுந்தார் போல் வேலையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு குழந்தை பிறப்பது போல் கனவு வந்தால் நீங்கள் பணிபுரியும் இடங்களில் உங்கள் பதவி உயர்வு கிடைக்கலாம். மற்றும் நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களை பாராட்டலாம்.
இரட்டை குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்:
இரட்டை குழந்தை கனவில் வந்தால் உங்களின் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
நிறைய குழந்தைகள் கனவில் வந்தால்:
நிறைய குழந்தைகள் கனவில் வந்தால் வரம் என்று கூறப்படுகிறது. அப்படி அந்த நிறைய குழந்தைகளும் அழுதால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் ஏற்படும்.
கனவில் குழந்தைக்கு பால் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:
கனவில் குழந்தைக்கு பால் கொடுப்பது போல் கனவு காண்பது மங்களகரமான விஷயமாக பார்க்கப்படுகிறது.



