வெசாக் தினத்திற்கு அடுத்த நாள் பொது விடுமுறை அல்ல! – சட்டரீதியான விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 8 ஆகும்

1 Min Read

2026ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் மே 30ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2026-ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட 2025.05.27 திகதியிட்ட 2438/22 இலக்க வர்த்தமானி அறிவித்தல் இதுவரை திருத்தப்படவில்லை என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வருட வெசாக் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாள் விடுமுறையா? என பல தரப்பினரும் வினவியதாக தொழிலாளர் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 1954ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் சட்டத்தின் 7வது பிரிவின் விதிகளுக்கு இணங்க, 1996.10.14 திகதியிட்ட 954/1 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட சட்டரீதியான விடுமுறை நாட்களின் எண்ணிக்கை எட்டாகும் என அவர் விளக்கமளித்துள்ளார்.

அந்த விடுமுறை நாட்களில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, 2026-ஆம் ஆண்டில் பின்வரும் தினங்கள் மட்டுமே பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன:

ஜனவரி 15 வியாழக்கிழமை – தைப்பொங்கல் தினம்

பெப்ரவரி 04 புதன்கிழமை – சுதந்திர தினம் (தேசிய தினம்)

ஏப்ரல் 13 திங்கட்கிழமை -தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முந்தைய தினம்

ஏப்ரல் 14 செவ்வாய்க்கிழமை – தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு தினம்

மே 01 வெள்ளிக்கிழமை – சர்வதேச தொழிலாளர் தினம்

மே 02 சனிக்கிழமை – வெசாக் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாள்

ஓகஸ்ட் 26 புதன்கிழமை – மீலாதுன் நபி (முகமது நபியின் பிறந்ததினம்)

டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை – நத்தார் தினம்

மேற்குறிப்பிட்ட தினங்கள் மட்டுமே 2026ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *