M.S தோனி 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார்! CSK அணியின் புதிய விக்கெட் கீப்பர் யார்?

1 Min Read

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கு தோனி பங்கேற்க மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோனி விளையாட மாட்டார்

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடரின் முதல் இரண்டு வாரங்கள் நடைபெறும் போட்டியில் தோனி விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்.எஸ். தோனி தசைப்பிடிப்பு காரணமாக முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

M.S தோனி 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார்! CSK அணியின் புதிய விக்கெட் கீப்பர் யார்? | Ms Dhoni Miss Ill 2026 Starting Weeks

சிஎஸ்கே அணி நிர்வாகம் இந்த செய்தியை சனிக்கிழமை அன்று தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

CSK அணியின் புதிய விக்கெட் கீப்பர்

தோனி விளையாடாத பட்சத்தில் தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பொறுப்பை சஞ்சு சாம்சன் கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற வீரர்கள் பரிமாற்றத்தின் போது ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே-வில் இணைத்தனர்.

M.S தோனி 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார்! CSK அணியின் புதிய விக்கெட் கீப்பர் யார்? | Ms Dhoni Miss Ill 2026 Starting Weeks

திங்கட்கிழமை குவஹாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து தன்னுடைய முதல் போட்டியில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *