பிரித்தானியாவுக்கான தூதுவரை திரும்பப் பெற்ற ரஷ்யா

1 Min Read

உக்ரைனுக்கு பிரித்தானியா ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் கிரெம்ளின் மீது அழுத்தம் அதிகரித்ததால், அந்நாட்டுக்கான தனது தூதரை ரஷ்யா திரும்பப் பெற்றுள்ளது.

ஏழு ஆண்டுகள் பிரித்தானிய தூதுவராகப் பதவியில் இருந்த ஆண்ட்ரே கெலின் கடந்த மாதம் பதவி விலகினார். அவருக்குப் பதிலாக வேறு யாரும் நியமிக்கப்படுவாரா என்பது குறித்து எந்த அறிகுறியும் இற்றை வரையும் இல்லை. கீயூவ்வுக்கு தாக்குதல் நடத்த பிரித்தானியா ட்ரோன்கள் வழங்கி வருவது தெரியவந்ததைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்கான ரஷ்யத் தூதரகம், விளைவுகள் குறித்து எச்சரிக்கை விடுத்ததால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. பிரித்தானியாவுக்கான ரஷ்யத் தூதரகத்தின் இணையதளத்தில் உள்ள தூதரகப் பட்டியல் பிரிவில் கெலினின் பெயர் இப்போது இடம்பெறவில்லை. மூத்த தூதரகப் பணியாளர்கள் பட்டியலில் தூதரகத்தின் பொறுப்புத் தூதரான வாசிலி ஏ. சிகானோவ் மட்டுமே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *