வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்த உகண்டா எதிர்க்கட்சி தலைவர்

1 Min Read

உகண்டாவின் எதிர்க்கட்சித் தலைவர் கிஸ்ஸா பெசிக்யே, தனது தேசத்துரோக வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததைத் தொடர்ந்து, தலைநகர் கம்பாலாவில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

உடல் நலிவுற்றுள்ள அந்த அரசியல்வாதி, தனக்காக வாதாட அரச வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து, சிறைக் காவலர்கள் அவரை அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் அவரது மனைவியான எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயைக் கையாளும் ஐ.நா. அமைப்பின் தலைவரான வின்னி பியானிமா கூறியுள்ளார்.

70 வயதான கிஸ்ஸா 2024 நவம்பர் முதல் தடுப்புக் காவலில் இருந்து வருகிறார். அவரது பிரதம வழக்கறிஞரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, தேசத்துரோகச் செயல்களைப் புகாரளிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். உகண்டாவின் நீண்டகாலத் தலைவராகப் பதவி வகிக்கும் யோவேரி முசெவேனிக்கு எதிராக நான்கு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பெசிக்யே, 2024 இல் கென்யாவில் திடீரென கடத்தப்பட்டு உகாண்டாவுக்கு அழைத்துச் வரப்பட்டார். அன்று தொடக்கம் அவர் தனது உதவியாளர் ஒபெய்ட் லுடாலேவுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் இருவர் மீதும் தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பி.பி.சி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *