அபூர்வ பூரண சூரிய கிரகணம் ஓகஸ்ட் 12இல்; நாசா நேரலை

1 Min Read

அபூர்வமான பூரண சூரிய கிரகணமொன்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நிகழவுள்ளது. உலகெங்கிலுமுள்ள மக்கள் இதனைப் பார்வையிடும் வகையில், நாசா விண்வெளி நிறுவனம் இக்காட்சியை நேரலை செய்யவுள்ளது. பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே தென்படவுள்ள இந்த அபூர்வ பூரண சூரிய கிரகண நிகழ்வை, உலகெங்கிலுமுள்ள மக்கள் பார்வையிட வசதியான வகையிலேயே நாசா நிறுவனம் இதனை நேரலை செய்யவுள்ளது.

அதற்கிணங்க கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்த முழு சூரிய கிரகணத்தை நேரடியாகப் பார்வையிட முடியும். அந்த வகையில் இந்த விண்வெளி நிகழ்வை நேரடியாகப் பார்க்க முடியாத உலகெங்கிலுமுள்ள மக்கள் கண்டுகளிப்பதற்காக, நாசா தமது உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் இதனை நேரலை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *