பஞ்சாயத்து பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் – சாதித்த ஸ்ராவணி

1 Min Read

நீட் மறுதேர்வில் பஞ்சாயத்து பள்ளியில் படித்த சேர்ந்த ஸ்ராவணி குடாலே(தேசிய அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியாக சந்தித்துள்ளார்.

நீட் மறுதேர்வு முடிவு

2026 – 2027 மாணவர் சேர்க்கைக்கான கடந்த மே 3 ஆம் திகதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு, ஜூன் 22 ஆம் திகதி மறுதேர்வு நடத்தப்பட்டது.

நீட் மறுதேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. 20 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய இந்த மறுதேர்வில் 11. 21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆரியன் குப்தா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பான்ஷுல் பன்சால் ஆகிய இரு மாணவர்களும் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவி

மகாராஷ்டிரவின் புனே மாவட்டம், பாராமதி தாலுகாவை சேர்ந்த ஸ்ராவணி குடாலே(shravani kudale), 710 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியாக உள்ளார்.

பஞ்சாயத்து பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் - சாதித்த ஸ்ராவணி | Shravani Kudale India Female Topper In Neet 2026

ஸ்ராவணி குடாலே, மகாராஷ்டிர மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 5வது இடமும் பிடித்துள்ளார்.

மகளின் வெற்றி குறித்து பேசிய அவளது பெற்றோர், “அவள் சிறப்பாகச் செயல்படுவாள் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம், ஆனால் அவள் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்துவாள் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

பஞ்சாயத்து பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் - சாதித்த ஸ்ராவணி | Shravani Kudale India Female Topper In Neet 2026

அவளுடைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஆசிரியர்கள் வழங்கிய வழிகாட்டுதல் ஆகியவை பலனளித்துள்ளன. பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் மகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம்” என தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *