கேரளாவில் மிக்ஸர் சாப்பிட்ட 3 வயது குழந்தை மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரம் அருகே குன்னும்புரத்தை சேர்ந்த தம்பதியினர் Muneer- Farsina, இவர்களது 3 வயது மகன் Muhammaed Rizan.
இன்று காலை உணவு முடிந்த பின்னர், குழந்தைக்கு மிக்ஸர் சாப்பிடக் கொடுத்துள்ளனர்.
அதில் இருந்த நிலக்கடலை எதிர்பாராதவிதமாக குழந்தையின் தொண்டையில் சிக்கியது, இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர், பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.



