இந்தியாவின் அமைதியான கிராமம்.., எந்த மாவட்டத்தில் உள்ளது தெரியுமா?

1 Min Read

பொதுவாக, இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 6.50 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்தியாவின் கிராமங்கள் பெரும்பாலும் அவற்றின் இயற்கை அழகு, திருவிழாக்கள், மக்களின் உரையாடல்களுக்காக போற்றப்படுகின்றன.

அந்தவகையில், இந்தியாவின் மௌன கிராமம் என்று அழைக்கப்படும் கிராமம் குறித்து பார்க்கலாம்.

 

இந்தியாவின் அமைதியான கிராமம்.., எந்த மாவட்டத்தில் உள்ளது தெரியுமா? | Which Village Is The Silent Village Of India

அதன்படி, ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் உள்ள தட்காய் கிராமம், இந்தியாவின் அமைதியான கிராமம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் காது கேளாதவர்கள் அல்லது பேசும் திறன் குறைபாடு கொண்டவர்கள் என்பதால் அங்கு எப்போதும் அமைதியான சூழல் நிலவுகிறது.

பாதர்வாஹ் பகுதியில் இருந்து சுமார் 105 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம், மலைகள் மற்றும் பசுமையான இயற்கை காட்சிகளால் சூழப்பட்டுள்ளது.

 

இந்தியாவின் அமைதியான கிராமம்.., எந்த மாவட்டத்தில் உள்ளது தெரியுமா? | Which Village Is The Silent Village Of India

இந்த தட்காய் கிராமத்தில் சுமார் 105 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பிறப்பிலிருந்தே செவித்திறன் அல்லது பேச்சுத் திறன் குறைபாடுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதனால், கிராம மக்கள் ஒருவருடன் ஒருவர் சைகை மொழி மூலம் மட்டுமே தொடர்பு கொள்கின்றனர்.

 

இந்தியாவின் அமைதியான கிராமம்.., எந்த மாவட்டத்தில் உள்ளது தெரியுமா? | Which Village Is The Silent Village Of India

குழந்தைகள் விளையாடும் சத்தம் அல்லது சாதாரண உரையாடல்களின் ஒலி கூட இங்கு கேட்பது மிகவும் அரிது.

1901ஆம் ஆண்டிலேயே இந்த நிலை குறித்த பதிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பல தலைமுறைகளாக இந்த குறைபாடு தொடர்வதற்கு மரபணு மாற்றமே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்தியாவின் அமைதியான கிராமம்.., எந்த மாவட்டத்தில் உள்ளது தெரியுமா? | Which Village Is The Silent Village Of India

இருப்பினும், சிலர் இதை உள்ளூர் நம்பிக்கைகள் மற்றும் சாபங்களுடன் தொடர்புபடுத்தியும் நம்புகின்றனர்.

இந்த சூழலை கருத்தில் கொண்டு, இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவு இந்த கிராமத்தைத் தத்தெடுத்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, சைகை மொழி பயிற்சி, மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசிய வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *