தாய்வானின் கிழக்கே ஒரு புதிய கடலோரக் காவல் ரோந்துப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சீனாவின் கடலோரக் காவல் படை விடுத்துள்ள அறிக்கையில், இந்தப் பகுதியில் சட்ட அமுலாக்கல் ரோந்துப் பணிகளை எமது கடற்படை மேற்கொள்ளும். தங்களது அதிகார வரம்பிற்குட்பட்ட நீர்நிலை பகுதிகளில் இத்தகைய ரோந்துப் பணிகள் வலுப்படுத்தப்படும். சீனாவின் பிராந்திய இறையாண்மை, கடல்சார் உரிமைகள் மற்றும் நலன்களை கடலோரக் காவல் படை உறுதியாகப் பாதுகாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாய்வானின் கடலோரக் காவல்படை, இரண்டு சீனக் கப்பல்களைக் கண்காணித்து வருவதாகவும், அவற்றுடன் பயணித்து அவற்றைக் கண்காணிக்கத் தனது சொந்தக் கப்பல்கள் இரண்டை முன்கூட்டியே நிலைநிறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எங்கள் கடல் எல்லைகளைத் தொந்தரவு செய்யும் கப்பல்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றவும், தேசிய இறையாண்மையை உறுதியாகப் பாதுகாக்கவும், எங்கள் கடல்சார் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எமது கடலோரக் காவல்படை தொடர்ந்து மேற்கொள்ளும்’ என்றும் தாய்வான் தெரிவித்துள்ளது.




