அவசர மனிதாபிமான உதவி குழுவை அனுப்பிய இந்தியா

1 Min Read

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு அனுபவம் வாய்ந்த மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றுடன் அவசர மனிதாபிமான உதவிகளையும் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

41 பேர் கொண்ட இக்குழுவினருடன் இரண்டு விமானப் படை விமானங்களில் உடனடி நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவென ‘ஒபரேஷன் அமிஸ்டாட்’ என்ற பெயரில் விஷேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ள இந்தியாவில் இருந்து பயணித்துள்ள அவசர மீட்புக்குழுவினர் வெனிசுலாவில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் குழுவினருடன் இணைந்து செயற்படுவர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

‘இந்த அவசர நிவாரண உதவிகளில் இந்திய இராணுவத்தின் ஒரு கள மருத்துவமனைப் பிரிவும், 35 தொன்களுக்கும் மேற்பட்ட நிவாரணப் பொருட்களும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தக் கடினமான நேரத்தில் வெனிசுலா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவளிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *