வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசரகால உதவியாக 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் திரட்டப்பட்டுள்ளது என்று அதன் வெளியுறவு உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் நேற்றுத் தெரிவித்தார்.
இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து, வெனிசுலாவின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அவர் கூறினார்.
அவர் எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில், ‘வெனிசுலா மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுமையான ஆதரவையும், அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். சி.என்.என்




