பிரான்ஸில் ஆயிரம் பேர் மரணம்

1 Min Read

ஐரோப்பாவைத் தாக்கி வரும் கடும் வெப்ப அலையின் விளைவாக பிரான்சில் 1,000 இற்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொது சுகாதார நிறுவனம் நேற்றுத் தெரிவித்தது

வெப்ப அலையினால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மரணங்கள் குறித்த தனது முதற்கட்ட எண்ணிக்கையை விவரித்த சான்டே பப்ளிக் என்ற இந்நிறுவனம், பெரும்பாலான மரணங்கள் முதியவர்களை உள்ளடக்கியவை என்றும், முதியோர் இல்லங்கள் மற்றும் பிற இல்லங்களில் ஏற்படும் மரணங்கள் குறித்த மேலதிகத் தகவல்கள் கிடைக்கப்பெறும் போது இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வெப்ப அலை கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. ஆனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் குறைந்துவிட்டதாக பிரான்சின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், வடகிழக்குப் பகுதியின் சில இடங்களில் இன்னும் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொய்ட்டர்ஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *