தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்கார்பரோ ஷோல் தீவுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மிதக்கும் கட்டமைப்பை அகற்றுமாறு சீனாவிடம் பிலிப்பைன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. பவளப்பாறை தீவை மனிதனால் உருவாக்கப்பட்ட தீவாக மாற்ற இடமளிக்க முடியாது என்றும் பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நகரக்கூடிய மிதக்கும் கட்டமைப்பின் இருப்பது குறித்த ஆட்சேபனையை பிலிப்பைன்ஸ் சீனாவிடம் தெரிவித்துள்ளதோடு, இது சீன ஆராய்ச்சிக் கப்பல்களால் நிலைநிறுத்தப்பட்டிருக்கலாம் என்று பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை குறிப்பிட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் நடத்திய ஒரு செய்தியாளர் மாநாட்டின் போது, அந்த மிதக்கும் கட்டமைப்பின் புகைப்படங்களைப் பகிர்ந்தனர். அதில், பலருடன் கூடிய ஒரு சதுர கிலோ மீற்றர் மேடையும், அதன் மையத்தில் ஒரு அண்டெனா வைக்கப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சு, அந்தப் பாறைத்திட்டின் மீது பெய்ஜிங்கிற்கு மறுக்க முடியாத இறையாண்மை உள்ளது என்றும், அங்கு அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட நடவடிக்கைகள் சட்டபூர்வமானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.



