பங்களாதேசத்தில் சின்னமுத்து தீவிரம்

1 Min Read

பங்களாதேசத்தில் சின்னமுத்து நோய்த் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களதும் உயிரிழப்பவர்களதும் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 15 ஆம் திகதி முதல் உறுதிசெய்யப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் சின்னமுத்து தொற்று இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 605 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 75,708 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த அலுவலகத்தின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

நாட்டில் சின்னமுத்து நோய்த்தொற்றுகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதோடு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சிறுவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

இந்நோய்ப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சிறுவர் தீவிர சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், சுவாச சிகிச்சை மற்றும் நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு பிரிவுகள் என்பவற்றில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இந்நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *