உக்ரைனின் பயன்பாட்டில் இல்லாத செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை சேமித்து வைக்கும் நிலையம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உலகின் மிக மோசமான அணுப் பேரழிவு நிகழ்ந்த செர்னோபில் ஆலையிலிருந்து சுமார் 9 மைல் தொலைவில் இந்த அணுமின் நிலையம் அமைந்துள்ளமை தெரிந்ததே.
இந்நிலையில் கிவ்யூவின் பொதுப் பணியாளர் குழுவும், அரச அணுசக்தி முகவரகமும், ‘கொள்கலன்களைப் பெறும் கட்டிடம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், தாக்குதல் நடந்த நேரத்தில் அங்கு பயன்படுத்தப்பட்ட எரிபொருள் எதுவும் சேமிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளன.இத்தாக்குதலினால் சேமிப்புக் கட்டிடத்தில் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், கதிர்வீச்சு அளவு பாதுகாப்பான வரம்புகளுக்குள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இத்தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் இழிவான தாக்குதல் என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.



