தனது ஜோதிடரை சிறப்பு அதிகாரியாக நியமித்த முதல்வர் விஜய்

1 Min Read

தமிழக முதல்வரின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதல்வர் விஜய்யின் ஜோதிடர் என்பது கவனிக்கத்தக்கது.

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு முக்கிய அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டும், புதிதாக நியமிக்கப்பட்டும் வருகின்றனர்.

அந்த வகையில், முதல்வர் விஜய்க்கு நீண்ட காலமாக ஆஸ்தான ஜோதிடராக இருந்து வரும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், கட்சியின் முக்கிய முடிவுகளில் திரைமறைவில் முக்கிய பங்காற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

தவெகவின் செய்தித் தொடர்பாளராக ஊடகங்களில் அறியப்பட்ட இவருக்கு, இப்போது நேரடியாகவே அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், முதல்வர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யின் அரசியல் ரீதியான நகர்வுகள் மற்றும் கட்சிக்கும் அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்புப் பணிகளில் இவர் இனி முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *