சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகள் வியட்நாம் ஊடாக தாய்வானுக்குள் கொண்டு வரப்படுவதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சீனாவின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய மற்றும் மீன்வளப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தாய்வான் தடை விதித்துள்ளது.
இந்த இறக்குமதி தடைகளை மீறி காளான்கள் போன்ற மரக்கறி வகைள் தாய்வானுக்குள் கொண்டு வரப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகள் வியட்நாமிய பொருட்கள் என்ற வகையில் மீளப் பொதியிடப்பட்டு தாய்வானுக்கு கொண்டு வரப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தாய்வானின் சீனப் பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக இந்த உத்தி பயன்படுத்தப்படுகின்றது.
இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள தாய்வான் விவசாய அமைச்சர் சென் ஜுன்னே-ஜி சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போது, ‘தைபேயின் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தனது அமைச்சு மேற்கொண்டு வருகிறது. வியட்நாம் வழியாக கொண்டு வரப்படும் விளைபொருட்கள் குறித்து வான்வழி ஆய்வுகள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். த கார்டியன்



