ஜெர்மனியிலுள்ள அமெரிக்க படைகளை குறைப்பதற்கு ட்ரம்ப் பரிசீலனை

1 Min Read

ஜெர்மனியில் உள்ள அமெரிக்கப் படைகளின் இருப்பைக் குறைப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானியத் தலைமையால் அமெரிக்கா அவமானப்படுத்தப்படுகிறது என்றும், இந்தப் போரில் வொஷிங்டனின் வியூகமின்மையையும் ஜெர்மன் நாட்டு அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் இந்த வாரத் தொடக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போர் தொடர்பாக அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ட்ரம்ப், நேட்டோ கூட்டாளியான ஜெர்மனிக்கு எதிராக ஒரு புதிய அச்சுறுத்தலை நேற்று முன்தினம் விடுத்துள்ளார்.

ஜெர்மனியில் உள்ள துருப்புக்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் இதுகுறித்த முடிவு எடுக்கப்படும் என்று ட்ரம்ப் ஒரு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

‘ட்ரம்ப்புடனான தனது தனிப்பட்ட உறவு எப்போதும் போலவே நன்றாக இருப்பதாக மெர்ஸ் கூறினார். ஆனால் ஈரான் போர் பற்றி ஆரம்பத்திலிருந்தே தனக்குச் சந்தேகங்கள் இருந்தன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.ஜனாதிபதி ட்ரம்ப் தமது முதலாவது பதவிக்காலத்தில், ஜெர்மனி தனது பாதுகாப்புக்காக மிகக் குறைவாகச் செலவிடுவதாகக் கூறி, அங்குள்ள அமெரிக்கத் துருப்புக்களைக் குறைக்கும் நடவடிக்கையை எடுத்தமையும் தெரிந்ததே.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *