கடத்தப்பட்ட 337 தொல்பொருட்களை இத்தாலியிடம் ஒப்படைத்த அமெரிக்கா

1 Min Read

அமெரிக்காவினால் இத்தாலியிலிருந்து கடத்தப்பட்ட 337 பெறுமதிமிக்க தொல்பொருட்கள் மீண்டும் இத்தாலியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கலாசார சொத்து பரிமாற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், ரோம் மற்றும் வொஷிங்டன் இடையிலான பலமான ஒத்துழைப்பை இது பிரதிபலிக்கிறது.

அமெரிக்காவினால் இத்தாலியிலிருந்து கடத்தப்பட்ட 337 பெறுமதிமிக்க தொல்பொருட்கள் மீண்டும் இத்தாலியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.May be an image of tea makerNo photo description available.May be an image of monument and text

இது அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கலாசார சொத்து பரிமாற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், ரோம் மற்றும் வொஷிங்டன் இடையிலான பலமான ஒத்துழைப்பை இது பிரதிபலிக்கிறது.

இந்த நடவடிக்கையில் நியூயோர்க் மென்ஹாட்டன் மாவட்ட சட்டமா அதிபர் அலுவலகம் முக்கிய பங்காற்றியுள்ளதுடன், அவர்கள் மாத்திரம் 221 பொருட்களைக் கண்டறிந்துள்ளனர்.

இத்தாலியின் இணையற்ற வரலாற்றையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கும், இக்கலைப்பொருட்களை மீண்டும் தாய்நாட்டிற்கு கொண்டு வருவதற்கும் அமெரிக்கா எப்போதும் ஆதரவளிக்கும் என இத்தாலிக்கான அமெரிக்க தூதுவர் டில்மேன் ஜே. ஃபர்டிட்டா தெரிவித்துள்ளார்.

கலாசார மரபுகளைப் பாதுகாப்பதென்பது அடையாளத்தை வலுப்படுத்துவதும், எதிர்கால சந்ததியினருக்கு கலாசார விழுமியங்களை கையளிப்பதுமாகும் என இத்தாலிய கலாசார அமைச்சர் அலெஸாண்ட்ரோ ஜூலி குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலி மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தொல்பொருள் கடத்தலைத் தடுக்கவும், தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இந்தப் பொருட்கள் மேலதிக ஆய்வுகளின் பின்னர் இத்தாலியில் அவை இருந்த இடங்களுக்கே மீண்டும் கொண்டு செல்லப்படவுள்ளன.May be an image of monument

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *