இந்தியா சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள தனது கடமைகளை மீறுவதாக ஐநா சிறப்பு அறிக்கையாளர் குற்றச்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்தின் அட்டூழியம்
மனித உரிமை ஆர்வலரும், பாலஸ்தீனம் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளருமான ஃபிரான்செஸ்கா அல்பானீஸ், காசாவில் நிலவும் தற்போதைய சூழல் குறித்துப் பேசியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61வது அமர்வில், தனது அறிக்கையைச் சமர்ப்பித்த அவர், 2023 முதல் இஸ்ரேலால் 1,500 குழந்தைகள் உட்பட 18,500 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் இஸ்ரேலுடனான உறவு குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டையும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், காசாவில் இஸ்ரேலிய இராணுவமும் அரசாங்கமும் செய்து வருவது கொடூரமானது அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
பாலஸ்தீனியர்கள் மீது குண்டுகளை வீசுவது, அவர்களைக் கைது செய்வது, அவர்களது வீடுகளில் இருந்து அழைத்துச் சென்று காணாமல் போகச் செய்வது போன்றவற்றை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

பாலஸ்தீனியர்களுக்குக் கடுமையான தண்டனைகளை விதிப்பது குறித்து ஒரு புதிய சட்டத்தை இஸ்ரேல் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடமைகளை மீறும் இந்தியா
இந்தச் சட்டம், இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் தனது வரம்புகளை எவ்வாறு மீறுகிறது என்பதைக் காட்டுகிறது. உலகம் இது குறித்துக் குரல் எழுப்ப வேண்டும், ஆனால் அதற்குப் பதிலாக கோழைத்தனமான மௌனத்தைக் கடைப்பிடித்து வருகிறது.
இந்திய மக்களும் இந்தப் பிரச்சினையில் வலுவாகக் குரல் எழுப்பி, தங்கள் அரசாங்கத்தைக் கேள்வி கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். இஸ்ரேல் செய்வதை பார்த்து நாம் மௌனமாக இருக்க முடியாது.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட ஒரு நாட்டிலிருந்து ஆயுதங்களை வர்த்தகம் செய்யவோ, பரிமாற்றம் செய்யவோ, அல்லது வாங்கவோ கூடாது என்ற கடமையையும் நாடுகளுக்கு விதித்துள்ளது.
எனவே, இந்தியா சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள தனது கடமைகளை மீறுகிறது. மேலும் அது பொறுப்புணர்வை எதிர்கொள்ளவும் நேரிடலாம்” என தெரிவித்துள்ளார்.



