இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனம்: விண்ணில் பாய்ந்த Vikram-1 ராக்கெட்

1 Min Read

இந்திய விண்வெளித் துறையில் புதிய சகாப்தமாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்திய விண்வெளி துறையின் வரலாற்று சாதனை

இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில், ஹைதராபாத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்(Skyroot Aerospace) நிறுவனம் தங்களது ஆக்மன்(Aagaman) திட்டத்தின் கீழ் விக்ரம் 1(Vikram-1) என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக புவி தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.

அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு தனியார் நிறுவனம் மூலம் தங்களது ராக்கெட்டை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.முழுக்க முழுக்க தனியார் நிறுவனம் வடிவமைத்து, உருவாக்கிய, விண்ணில் செலுத்திய விக்ரம் 1 ராக்கெட்டின் இந்த வெற்றியின் மூலம், இந்திய தனியார் விண்வெளி நிறுவனங்களும் உலகளாவிய போட்டியில் தங்களை முன்னிலைப்படுத்தி கொண்டுள்ளது.

இந்த ராக்கெட் ஏவுதல் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது ஸ்கைரூட் குழுவினர் “இது விண்வெளித்துறையின் புதிய விடியல் என்று தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனம்: விண்ணில் பாய்ந்த Vikram-1 ராக்கெட் | Skyroot Aerospace Successfully Launched Vikram 1

இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனம்: விண்ணில் பாய்ந்த Vikram-1 ராக்கெட் | Skyroot Aerospace Successfully Launched Vikram 1

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *