QR குறியீடுகளை ஸ்கேன் செய்தால் எரிபொருள்: இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை

1 Min Read

இலங்கை முழுவதும் QR குறியீடுகளை பயன்படுத்தி பெட்ரோல் நிரப்பும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.

QR குறியீடுகள் மூலம் பெட்ரோல்

இலங்கையிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த QR குறியீடுகளை பயன்படுத்தி பெட்ரோல் நிரப்பும் நடைமுறை இன்று முதல்(15.03.2026) அமுலுக்கு வருவதாக இலங்கையின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது..

QR குறியீடுகளை ஸ்கேன் செய்தால் எரிபொருள்: இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை | Fuel Filled After Qr Code Scan In Sri Lanka

QR குறியீட்டை எப்படி வாங்குவது?

இதன்படி, http://fuelpass.gov.lk என்ற இணையத்தளத்தின் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் போது, அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை வழங்கி விட வேண்டும். இறுதியாக உங்கள் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் ரகசிய இலக்கத்தை (OTP) பதிவு செய்ய வேண்டும்.

பின்னர், உங்கள் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர், உங்கள் வாகனத்திற்கான விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

QR குறியீடுகளை ஸ்கேன் செய்தால் எரிபொருள்: இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை | Fuel Filled After Qr Code Scan In Sri Lanka

விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு தனிப்பட்ட QR குறியீடு (QR Code) வழங்கப்படும். இந்த தனிப்பட்ட QR குறியீடுகளை ஸ்கேன் செய்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், அதை உங்கள் தொலைபேசிக்கு பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *