இதற்காகதான் பாகிஸ்தானியரை எடுத்தோம்: அவரைப் பெற்றதில் மகிழ்ச்சி – சன்ரைசர்ஸின் வெட்டோரி

1 Min Read

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதை ஏலத்தில் எடுத்ததற்கான காரணத்தை டேனியல் வெட்டோரி விளக்கியுள்ளார்.

பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்

இங்கிலாந்தின் The Hundred கிரிக்கெட் தொடரில் விளையாட சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதை ஏலத்தில் எடுத்திருந்தது.

Abrar Ahmedகலாநிதி மாறன் தலைமையிலான சன் குழுமத்திற்கு சொந்தமான இந்த அணி, இறுதியில் அப்ராரை ரூ.2.34 கோடிக்கு வாங்கியது.

ஆனால், அப்ரார் அகமது (Abrar Ahmed) இந்தியா மற்றும் இந்திய இராணுவத்தை வகையில் கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்ததால், அணி உரிமையாளர் காவ்யா மாறன் கடும் எதிர்ப்புகளை இந்திய ரசிகர்களிடம் இருந்து பெற்றார்.

டேனியல் வெட்டோரி விளக்கம்

மேலும், சன்ரைசர்ஸ் லீட்ஸ் (Sunrisers Leeds) அணியின் எக்ஸ் கணக்கு காரணம் கூறப்படாமல் இடைநிறுத்தப்பட்டது.

Abrar Ahmed இந்த நிலையில், சன்ரைசர்ஸ் லீட்ஸின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி (Daniel Vettori) தங்கள் அணியில் அப்ரார் அகமதை ஒப்பந்தம் செய்த முடிவை ஆதரித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ஆரம்பத்தில் முன்னுரிமை பெற்ற அடில் ரஷீத்தை நாங்கள் தவறவிட்டவுடன், நாங்கள் வெளிப்படையாக வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளருக்கு சென்றோம். நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த நான்கு அல்லது ஐந்து பேரில் அப்ராரும் ஒருவர் ஆவார். அவரைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.

Daniel Vettori

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *