விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் – குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா

1 Min Read

விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரிய சங்கீதா விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

விஜய் – சங்கீதா விவாகரத்து

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா | Reason For Sangeetha Apply Divorce From Tvk Vijay

செங்கல்பட்டு மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனு வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி விசாரணைக்கு வர உள்ளது.

இந்த மனுவில் விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நடிகையுடன் தொடர்பு

இந்த மனுவில், “நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது தனக்கு 2021 ஏப்ரல் முதல் தெரியவந்ததாகவும், இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம்.

திருமணத்துக்கு மீறிய உறவை முறித்துக் கொள்வதாக விஜய் உறுதியளித்தபோதிலும் அவர் அந்த உறவை தொடர்ந்தார். இது எனக்குள் மனவேதனையை ஏற்படுத்தியது.

விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா | Reason For Sangeetha Apply Divorce From Tvk Vijay

செப்டம்பர் 2021 மற்றும் பிப்ரவரி 2022க்கு இடையில், வழக்கறிஞர் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீவு காண முயன்றும் எந்த தீர்வும் ஏற்படவில்லை.

விஜய் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று, குறிப்பிட்ட நடிகையுடன் பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

நடிகையின் பெயரை வெளியிடுவேன்

நடிகை இந்த வெளியூர் பயணங்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்தது எனக்கும் குழந்தைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியது.

தேவையற்ற விளம்பரத்தைத் தவிர்க்கவும், அனைத்து தரப்பினரின் நற்பெயரைப் பாதுகாக்கவும், தற்போது நடிகையின் பெயரை வெளியிடவில்லை.

விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா | Reason For Sangeetha Apply Divorce From Tvk Vijay

என் கணவரிடமிருந்து ஏதேனும் அழுத்தம் வந்தால், நடிகையின் பெயரை வெளியிடுவேன். தேவைப்பட்டால் அந்த நடிகையை 2வது எதிர்மனுதாரராக வழக்கில் சேர்ப்பேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் விஜய்க்கு அரசியல் ரீதியாகவும் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *