மத்திய கிழக்கிற்கு F-22 ரக போர் விமானத்தை அனுப்பிய அமெரிக்கா: அதிகரிக்கும் பிராந்திய பதற்றம்

1 Min Read

அமெரிக்காவின் எப் -22 ரக போர் விமானம் மத்திய கிழக்கிற்கு வந்தடைந்து இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வான்வழித் திறன்களை தீவிரப்படுத்தும் அமெரிக்கா

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே போர் சூழலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது, இந்த பிராந்தியத்தில் தங்களுடைய வான்வழித் தாக்குதல் திறன்களை அதிகப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

மத்திய கிழக்கிற்கு F-22 ரக போர் விமானத்தை அனுப்பிய அமெரிக்கா: அதிகரிக்கும் பிராந்திய பதற்றம் | Us Send F 22 Fighters Plane To Middle East

இந்நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட அமெரிக்காவின் ஆறு F-22 ராப்டர் (Raptor) ரக ஸ்டீல்த் போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலானது, தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் நாளிதழில் வெளியிடப்பட்ட தகவலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த 6 F-22 ராப்டர் ரக போர் விமானங்கள் புதன்கிழமையன்று அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ளன.

நீண்ட தூர பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக, இவற்றுடன் எரிபொருள் நிரப்பும் விமானங்களும் இணைந்து பயணிக்கின்றன.

மத்திய கிழக்கிற்கு F-22 ரக போர் விமானத்தை அனுப்பிய அமெரிக்கா: அதிகரிக்கும் பிராந்திய பதற்றம் | Us Send F 22 Fighters Plane To Middle East

இந்த 6 F-22 ராப்டர் ரக போர் விமானங்கள் முதற்கட்டமாக பிரித்தானியாவின் லெக்கன்ஹீத் ராயல் விமானப்படை தளத்தை சென்றடையும் என்று தெரியவந்துள்ளது.

பின்னர் 6 F-22 ராப்டர் ரக போர் விமானங்கள் தெற்கு இஸ்ரேலில் உள்ள விமானப்படை தளத்திற்கு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானப்படை தளத்தில் ஏற்கனவே 11 F-22 ரக போர் விமானங்கள் தரையிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *