இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை படுதோல்வியடைந்தது குறித்து குமார் சங்கக்காரா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இலங்கை அணி படுதோல்வி
2026 டி20 உலகக்கிண்ணத்தின் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 16.4 ஓவர்களில் 95 ஓட்டங்களுக்கு சுருண்டதால், இங்கிலாந்து 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் மோசமாக சொதப்பினர். குறிப்பாக ஹேமந்தா ஹிட்விக்கெட் ஆனது ரசிகர்களை கோபப்படுத்தும் வகையில் இருந்தது.

சங்ககாரா, மேத்யூஸ் அதிருப்தி
இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியில் சேசிங் செய்து இலங்கை அணி, இங்கிலாந்துக்கு எதிராக 100 ஓட்டங்களுக்குள் சுருண்டதை சங்ககாரா, மேத்யூஸ் போன்ற முன்னாள் வீரர்கள் கவலையுடன் விமர்சித்துள்ளனர்.
குமார் சங்ககாரா (Kumar Sangakkara) தனது பதிவில், “இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி சிறப்பாக செயல்படவில்லை. பந்துவீச்சாளர்களின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல், துடுப்பாட்ட வீரர்களின் அதே நிலைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கடினமான கைகள், மிஷாராவின் நோக்கமின்மை மற்றும் ஆட்ட நிலைமை அல்லது பிட்சை சரியாகப் படிக்காதது அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியது” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஏஞ்சலோ மேத்யூஸ் (Angelo Mathews) தனது பதிவில், “ஐயோ! வார்த்தைகளே இல்லை! இலங்கையின் பரிதாபகரமான துடுப்பாட்டம். இவ்வளவு சிறப்பாக பந்துவீசியும், எந்த துடுப்பாட்ட வீரரும் புத்திசாலித்தனமாக விளையாடி இலங்கையை வெற்றிக்கு கொண்டு செல்லவில்லை! இது பயங்கரம்!” என கூறியுள்ளார்.






