பாகிஸ்தான் எல்லையில் காலி பாட்டில்களை தொங்கவிட்டுள்ள இந்தியா – என்ன காரணம்?

1 Min Read

பாகிஸ்தான் எல்லையில் ஏன் இந்தியா காலி பாட்டில்களை தொங்கவிட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

எல்லையில் காலி பாட்டில்கள்

இந்தியா தனது நில எல்லைகளை சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளுடன் பகிர்ந்து வருகிறது.

இந்த எல்லை பகுதிகளில், எல்லைப் பாதுகாப்புப் படை(BSF), சாஸ்திர சீமா பால், இந்தோ – திபெத்திய எல்லை காவல் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

பாகிஸ்தான் எல்லையில் காலி பாட்டில்களை தொங்கவிட்டுள்ள இந்தியா - என்ன காரணம்? | Why Empty Glass Bottles Hung On India Pak Border

இந்தியா தனது முக்கிய எதிரி நாடான பாகிஸ்தானுடன் 3,320 கிலோ மீட்டர் தூரம் எல்லையை பகிர்ந்து வருகிறது.

இவ்வளவு நீண்ட எல்லையை வீரர்கள் மட்டும் 24 மணி நேரமும் ரோந்து வர முடியாது.

பாகிஸ்தான் எல்லையில் காலி பாட்டில்களை தொங்கவிட்டுள்ள இந்தியா - என்ன காரணம்? | Why Empty Glass Bottles Hung On India Pak Border

அதே போல், இவ்வளவு தூரத்திற்கு வெப்ப சென்சார் அல்லது கண்காணிப்பு கேமரா அமைப்பது பாரியசெலவை ஏற்படுத்தும். அவ்வாறு அமைத்தாலும் கூட கன மழை, பனிப்பொழிவு, மின்வெட்டு காரணமாக மின்னணு சாதனங்கள் செயலிழக்கக்கூடும்.

என்ன காரணம்?

அடர்த்தியான மூடுபனி இருக்கும் போது,அதிநவீன கேமராக்களால் கூட ஊடுருவும் நபர்களைக் கண்டறிய முடியாது.

பாகிஸ்தான் எல்லையில் காலி பாட்டில்களை தொங்கவிட்டுள்ள இந்தியா - என்ன காரணம்? | Why Empty Glass Bottles Hung On India Pak Border

இதற்கு மாற்றாக குறைந்த விலையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாட்டை இந்தியா உருவாகியுள்ளது. எல்லை பகுதியில், உள்ள வேலிகளில் காலியான கண்ணாடி பாட்டில்களை நெருக்கமாக கட்டி தொங்க விட்டுள்ளனர்.

எதிரி நாட்டினர் அல்லது வன விலங்குகள் எல்லையை தொடும் போது, கம்பிகள் நகர்ந்து, இந்த பாட்டில்கள் ஒன்றோடு ஒன்று மோதி நீண்ட தூரத்திற்கு சத்தம் எழுப்பும்.

பாகிஸ்தான் எல்லையில் காலி பாட்டில்களை தொங்கவிட்டுள்ள இந்தியா - என்ன காரணம்? | Why Empty Glass Bottles Hung On India Pak Border

எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்கள் இந்த சத்தத்தை கேட்டதும் உடனடியாக நவடிக்கை மேற்கொள்வார்கள்.

இதற்கு மின்சாரமோ பேட்டரியோ தேவை இல்லை. மழை, பனி, வெயில் போன்ற எந்த காலநிலையில் பாதிப்பை ஏற்படுத்தாது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *