இந்தியாவிலேயே அதிக தங்கம் வைத்துள்ள மாநிலம்.., எது தெரியுமா?

1 Min Read

பொதுவாக தங்க நகைகளை அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.

சமீப காலமாக, தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கின்ற நிலையில், நகை வாங்க முடியாத சிரமத்தில் பல பேர் இருக்கின்றனர்.

திருமணம், பண்டிகை, விழாக்களில் வழங்கப்படும் முக்கியமான பரிசாகவும், மங்களகரமானதாக கருதப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிக தங்கம் வைத்துள்ள மாநிலம்.., எது தெரியுமா? | Which State Has The Most Gold In India In Tamil

இந்நிலையில், இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக தங்கம் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) தகவலின்படி, தங்கச் சுரங்கம் மற்றும் உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது.

நாட்டில் உற்பத்தியாகும் தங்கத்தின் 99 சதவீதம் கர்நாடகா சுரங்கங்களில் இருந்து வருகிறது.

கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹுட்டி தங்கச் சுரங்கம் நாட்டின் மிகப் பழமையான தங்கச் சுரங்கமாகும்.

இந்தியாவிலேயே அதிக தங்கம் வைத்துள்ள மாநிலம்.., எது தெரியுமா? | Which State Has The Most Gold In India In Tamil

கோலார் தங்கச் சுரங்கமும் தங்க உற்பத்தியில் மிகவும் பிரபலமானதாக உள்ளது. ஆனால் அதிக தங்க இருப்பு உள்ள மாநிலம் பீகார்.

இம்மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் சுமார் 222.8 மில்லியன் டன் தங்கத் தாது இருப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது நாட்டின் மொத்த தங்க இருப்பில் 44 சதவீதமாகும்.

உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் நாடான இந்தியா, உலகின் மொத்த தங்க நுகர்வில் 26 சதவீத பங்கை கொண்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *