ரஷ்ய எண்ணெய் விவகாரம்… நெருக்கடி தரும் ட்ரம்ப்: நழுவும் இந்தியா

2 Min Read

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா இனி ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தொடராது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் இறக்குமதி

இதனையடுத்து, 50 சதவீதமாக இருந்த வரியை ட்ரம்ப் நிர்வாகம் 18 சதவீதமாக குறைத்துள்ளது. ஆனால், ரஷ்யா எண்ணெய் விவகாரத்தில் இந்தியா தரப்பு இதுவரை அமெரிக்காவுக்கு உறுதி அளிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய எண்ணெய் விவகாரம்... நெருக்கடி தரும் ட்ரம்ப்: நழுவும் இந்தியா | India To Stop Russia Oil

தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்றாக வெனிசுலா மற்றும் அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு மோடி ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் ட்ரம்ப் 25 சதவீத தண்டனை வரிகளை விதித்த பிறகும் கூட, இந்தியா தினமும் சுமார் 1.5 மில்லியன் பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.

சீனாவிற்கு அடுத்து ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாகும். இந்த நிலையிலேயே இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும், இனி அமெரிக்காவிடமிருந்தும், சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்தும் எண்ணெய் வாங்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஆனால் வரி குறைப்பை வரவேற்றுள்ள இந்தியா, ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல்களைக் குறைப்பது குறித்து வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

இந்திய அரசாங்கம் இதற்கு முன்னர் ரஷ்யாவுடனான தனது எண்ணெய் வர்த்தகத்தை நாட்டின் எரிசக்திப் பாதுகாப்புக்கு அவசியமானது என்று கூறிப் பாதுகாத்து வந்துள்ளது.

தனது தேவையின் பெரும்பகுதியை ஈடுசெய்வதற்காக மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை இந்தியா பெரிதும் சார்ந்துள்ளது.

ரஷ்ய எண்ணெய் விவகாரம்... நெருக்கடி தரும் ட்ரம்ப்: நழுவும் இந்தியா | India To Stop Russia Oil

வரலாற்று ரீதியாக, இந்தியாவின் ரஷ்யாவுடனான உறவு எரிசக்தியை விட பாதுகாப்புத் துறையைச் சுற்றியே அதிகம் அமைந்திருந்தது. ரஷ்யா இந்தியாவின் எண்ணெய் தேவையில் ஒரு சிறு பகுதியையே வழங்கினாலும், அதன் இராணுவத் தளவாடங்களில் பெரும்பகுதியை வழங்கியது.

வெனிசுலா உற்பத்தி

ஆனால் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு, இந்தியா இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கியது.

இதன் மூலம் ரஷ்யா தனது நெருக்கடியில் சிக்கியுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், தனது கொடூரமான போருக்குத் தொடர்ந்து நிதியளிக்கவும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள முயன்றது.

ரஷ்ய எண்ணெய் விவகாரம்... நெருக்கடி தரும் ட்ரம்ப்: நழுவும் இந்தியா | India To Stop Russia Oil

வெனிசுலா எண்ணெய், ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு இணையான தரத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், வெனிசுலா உற்பத்தி செய்வதை விட அதிக எண்ணெயை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது.

இருப்பினும் ட்ரம்பின் நெருக்கடியால் வெனிசுலாவில் இருந்தும் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலைக்கு தள்ளப்படலாம். இது, உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா வாங்கும் ரஷ்ய எண்ணெயில் ஒரு பங்கை ஈடுசெய்ய உதவும் என்றே கூறுகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *