இலங்கை கலாச்சார முறைப்படி திருமணம்: குடாவ கடற்கரையில் நிறைவேறிய ஐரோப்பிய தம்பதியின் ஆசை

1 Min Read

நேற்று வெளிநாட்டு தம்பதியர் குடாவ கடற்கரையில் இலங்கையின் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

வெளிநாட்டு தம்பதியர் திருமணம்

இலங்கையின் புத்தளம், கற்பிட்டி, குடாவ கடற்கரையில் நேற்று ஐரோப்பிய நாடான ஹங்கேரியை சேர்ந்த ஜோனஸ் கோவாஸ் மற்றும் சில்வி தோத் என்ற தம்பதி மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

இலங்கையின் இயற்கை அழகு மற்றும் கலாச்சாரத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருப்பதால், இலங்கை கலாச்சார முறைப்படி நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இலங்கை கலாச்சார முறைப்படி திருமணம்: குடாவ கடற்கரையில் நிறைவேறிய ஐரோப்பிய தம்பதியின் ஆசை | Hungary Couple Married In Sri Lanka

இந்த திருமணமானது இலங்கை கலாசார விழுமியங்களுக்கு முன்னுரிமை அளித்து நடத்தப்பட்டுள்ளது, இந்த கொண்டாட்டத்தை ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகியோர் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வைத்தனர்.

இந்த திருமணத்திற்கான மணமேடையானது, தென்னோலைகளால் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அத்துடன் பாரம்பரிய நடனக் கலைஞர்கள் மணமக்களை மேடைக்கு அழைத்து வந்தனர், மேலும் அங்கு கலாச்சார முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றன.

இலங்கை கலாச்சார முறைப்படி திருமணம்: குடாவ கடற்கரையில் நிறைவேறிய ஐரோப்பிய தம்பதியின் ஆசை | Hungary Couple Married In Sri Lanka

பல்வேறு இன மக்கள் வாழும் கற்பிட்டி தீபகற்பத்தில் இத்தகைய நிகழ்வு அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்பு திருமணத்தை அப்பகுதியில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆர்வமாக கண்டு ரசித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *