SA20 போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சொதப்பினார்.
ரோஸ்ஸோவ், முல்டர்
பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான SA20 போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது.
இதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாடியது. அணியின் ஸ்கோர் 16 ஆக உயர, பாப் டூ பிளெஸ்ஸிஸ் 8 பந்துகளில் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
எனினும் ரோஸ்ஸோவ், முல்டர் இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட அணியின் ஸ்கோர் விரைவாக உயர்ந்தது.
168 ஓட்டங்கள்
ஜோபர்க் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் குவித்து. ரோஸ்ஸோவ் (Rossouw) 33 பந்துகளில் 48 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாசினார்.
முல்டர் 28 பந்துகளில் 43 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 3 பவுண்டரிகள்), அகேல் ஹொசேன் 10 பந்துகளில் 22 ஓட்டங்களும் குவித்தனர்.
பிரிட்டோரியா அணியின் தரப்பில் மில்ஸ், யூசுப் மற்றும் பார்சன்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.





