அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் மீது இரண்டு ஊடக நிறுவனங்கள் வழக்குத் தொடுத்துள்ளன.
ட்ரூத் சோசியல் தளம் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய, கட்டணம் வசூலிக்கும் சேவை மூலம் டிரம்ப் பணம் சம்பாதிப்பதாக ஊடக நிறுவனங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
டிரம்ப் மீடியா அன்ட் டெக்னோலஜி நிறுவனம், இம்மாத ஆரம்பத்தில் ‘ட்ரூத் ஏபிஐ’ எனும் சந்தா கட்டும் சேவையை ஆரம்பித்தது. அதில் டிரம்ப் வெளியிடும் செய்திகளை முன்கூட்டியே பெறுவதற்கு வங்கிகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் மாதம் 100,000 டொலர் வரை கட்டணம் விதிக்கப்படுகிறது. ஜனாதிபதி டிரம்ப்பே செய்தியை உருவாக்கி, அதை அவருடைய தளத்தில் முதலில் வெளியிட்டுப் பணம் சம்பாதிப்பது லஞ்சம், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று நியூயோர்க்கில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒரு செய்தியைச் சொன்னால் அது எல்லோருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்துள்ள செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.




