சதொச நிறுவனம் 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, இன்று (08) முதல் அமுலாகும் வகையில், நாடு முழுவதுமுள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவும் நுகர்வோர் இந்தப் பொருட்களை சலுகை விலையில் கொள்வனவு செய்ய முடியும்.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு இணங்க, நுகர்வோருக்குப் நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் சூழலில் மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை கட்டுப்படியான விலையில் தடையின்றி வழங்குவதே இவ்விலை குறைப்பின் பிரதான நோக்கம் என சதொச நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் இந்தத் தீர்மானம், வார இறுதி நாட்களில் சந்தைக்குச் செல்லும் மக்களுக்கு ஒரு நிம்மதியான செய்தியாகுமென அந்நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
- வெள்ளைப்பூடு (1kg): புதிய விலை ரூ. 649 (ரூ. 50 குறைப்பு)
- பெரிய வெங்காயம் (1kg): புதிய விலை ரூ. 224 (ரூ. 35 குறைப்பு)
- உருளைக்கிழங்கு (1kg): புதிய விலை ரூ. 239 (ரூ. 20 குறைப்பு)
- நிலக்கடலை (1kg): புதிய விலை ரூ. 869 (ரூ. 10 குறைப்பு)
- வெள்ளை பச்சரிசி (1kg): புதிய விலை ரூ. 187 (ரூ. 9 குறைப்பு)
- பாசிப்பயறு (1kg): புதிய விலை ரூ. 844 (ரூ. 5 குறைப்பு)
- சிவப்பு பச்சரிசி (1kg): புதிய விலை ரூ. 169 (ரூ. 4 குறைப்பு)
- கடலை (1kg): புதிய விலை ரூ. 327 (ரூ. 2 குறைப்பு)
- வெள்ளை நாட்டு அரிசி (1kg): புதிய விலை ரூ. 197 (ரூ. 2 குறைப்பு)
உளுந்து (1kg): புதிய விலை ரூ. 864 (ரூ. 1 குறைப்பு)




