அரச தொழில் வழங்கி தனிப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அகில விராஜ் கைது

0 Min Read

முன்னாள் கல்வி அமைச்சரும் ஐ.தே.க. முன்னாள் பொதுச் செயலாளருமான அகில விராஜ் காரியவசம கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலக பணிக்காக ஆட்சேர்ப்பு செய்து, தனது சொந்த பணிகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து இடம்பெற்று வந்த விசாரணைகளின் அடிப்படையில் இன்றையதினம் (05) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்த அவர் சற்று முன்னர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *