மலையகத்துக்கான தபால் சேவையை வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம்( 04) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபின் ஏற்பாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்னவின் பங்கேற்பில் நடைபெற்றது.தபால் சேவைகளில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பெருந்தோட்டங்களில் தபால் சேவையினை வலுப்படுத்தல்,தபால்துறையில் புதிய ஆட்களைச் சேர்த்தல் உள்ளிட்டவை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில்,தோட்டங்களுக்கு தபால் சேவையை சரியான முறையில் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்கள், மலையக மக்களுக்கான முகவரி மற்றும் மலையக் தியாகிகளுக்கு முத்திரை வெளியிடுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர்களான அம்பிகா சாமுவேல், கிட்ணன் செல்வராஜ் ஆகியோருடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சின் செயலாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.




