கடலில் வீழ்ந்த 17 கொள்கலன்கள்: மீனவர்களின் பாதுகாப்பு கருதி அவசர எச்சரிக்கை!

1 Min Read

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றிலிருந்து 17 வெற்று கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இந்த விபத்தானது வட அகலாங்கு 06 54’ மற்றும் கிழக்கு நெட்டாங்கு 079 32’ ஆகிய பகுதிகளுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.

தற்போது கடலில் நிலவும் நீரோட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த வெற்று கொள்கலன்கள் பேருவளையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடற்கரைப் பகுதியை நோக்கி மிதந்து வருவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதன் காரணமாக, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணங்களை மேற்கொள்ளும் அனைத்துப் பகுதின மற்றும் சிறிய ரக மீன்பிடிப் படகுகள் இது குறித்து மிகுந்த அவதானத்துடனும், பாதுகாப்புடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறாக மிதந்து வரும் கொள்கலன்கள் ஏதேனும் தங்களுக்கு தென்பட்டால், அது குறித்து உடனடியாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் வானொலிச் செய்தித் தொடர்பாடல் மையத்திற்கு அல்லது உங்களுக்கு அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *