ஈராக்கில் ஒரு மில். பீப்பாய் எண்ணெய் பெறும் துருக்கி

1 Min Read

வடக்கு ஈராக்கில் உள்ள பிரிட்டிஷ் பெற்றோலியம் நிறுவனத்தின் கிர்குக் எண்ணெய் வயலின் பங்குகளை வாங்கியதைத் தொடர்ந்து, ஈராக்கிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் வரை எண்ணெய் பெற முடியும் என்று துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கிக்கு விஜயம் செய்துள்ள ஈராக்கியப் பிரதமர் அலி அல்-ஜைதியுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அரசுக்குச் சொந்தமான துருக்கிய பெற்றோலியம் நிறுவனம், ஒரு தனிப் பங்குப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், கிர்குக் லிமிடெட்டின் பிபி எனர்ஜி நிறுவனத்தில் 15 சதவீதப் பங்குகளை வாங்கும் என்றும் எர்டோகன் கூறினார்.

இருதரப்புப் பாதுகாப்பு, வர்த்தகம், போக்குவரத்து மற்றும் நீர் முகாமைத்துவம், மற்றும் புதிய எரிசக்தி ஒப்பந்தம் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அல்-ஜைதி துருக்கிக்கு விஜயம் செய்திருந்தமை தெரிந்ததே.

அல் ஜசீரா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *