மேற்கு அவுஸ்திரேலியாவின் அல்பானியில் உள்ள பிரின்ஸஸ் ரோயல் துறைமுகப் பகுதியில் 12 டொல்பின்கள் இறந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
பண்ட்ரோபிகல் புள்ளி டொல்பின் இன டொல்பின்களே இவ்வாறு இறந்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த டொல்பின்கள் துறைமுகப் பகுதியில் 24 மணித்தியாலயங்களில் இறந்துள்ளன. டொல்பின் இறந்துள்ளமை குறித்து பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள், உயிர்ப்பல்வகைமை மற்றும் பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
அல்பானி வோட்டர் புரண்ட் மெரினாவின் ஆழமற்ற பகுதியில் 12 டொல்பின்கள் முதலில் அவதானிக்கப்பட்டதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த டொல்பின்களில் ஒன்று இறந்தது. அதனை பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் அகற்றினர். ஏனையவை பொதுமக்களால் மீட்டெடுக்கப்பட்டு திரும்பவும் கடலுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஏ.பி.சி நியூஸ்




