உக்ரைனுடன் அமைதி பேச்சை மீண்டும் ஆரம்பிக்க திட்டமில்லை

1 Min Read

ரஷ்யா உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உடனடித் திட்டங்கள் எதுவுமில்லை என கிரெம்ளின் நேற்று தெரிவித்தது.

உக்ரைன் விவகாரத்திற்கான அமைதி தீர்வை எளிதாக்குவதற்கு எங்கள் துருக்கி நண்பர்கள் தயாராக இருப்பதை நாங்கள் நன்கறிவோம் என்றும் கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.

துருக்கிய தரப்பிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இருப்பினும், தற்போதைக்கு பேச்சுவார்த்தை செயல்முறையை மீண்டும் தொடங்குவதற்கான உடனடி வாய்ப்புகள் எதுவுமில்லை. அதற்கான அறிகுறிகள் எதையும் நாங்கள் காணவில்லை. ஆயினும்கூட ரஷ்ய தரப்பு நிச்சயமாக இவ்வழிக்குத் திறந்த மனதுடன் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியின் அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றத்தை கிரெம்ளின் கண்காணித்து வருவதாகவும், அமைதி உடன்படிக்கைக்கு வழிவகுக்கும் முடிவுகளை எடுக்க கீயூவ் தயாராக இல்லாத பட்சத்தில், புதிய பிரதமர், பாதுகாப்பு அமைச்சரை நியமிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் அவர் மேலும் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *