காசாவில் இஸ்ரேல் தாக்குதல் இருவர் பலி, 15 பேர் காயம்

1 Min Read

காசாவில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் நிலையில் இஸ்ரேல் நேற்று முன்தினம் முன்னெடுத்த தாக்குதல்களினால் இருவர் கொல்லப்பட்டுள்ளதோடு 15 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசாவில் உள்ள பலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. மீட்புக் குழுவினரால் அவர்களைச் சென்றடைய முடியாததால், மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியிலும், வீதிகளிலும் சிக்கியிருப்பதாகவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள சல்பிட்டின் மேற்கே உள்ள சர்தா கிராமத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வஃபா தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. அன்று முதல் 1,031 இறப்புகளும் 3,309 காயங்களும் ஏற்பட்டுள்ளன. அத்தோடு 785 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அவ்வமைச்சு கூறியுள்ளது.

அல் ஜசீரா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *