பிரான்ஸ் நாட்டில் எபோலா தொற்றுக்கு உள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டு நாடு திரும்பிய மருத்துவர் ஒருவருக்கே இவ்வாறு எபோலா பாதிப்பு ஏற்பட்டிருப்பது பிரான்ஸ் நாட்டினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்த மருத்துவர் உடனடியாக விஷேட சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் பிரெஞ்சு சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. கொங்கோ ஜனநாயகக் குடியரசு கடந்த மாதம் எபோலா பரவல் குறித்து அறிவித்தது, ஆனால் இந்த வைரஸ் பல வாரங்களுக்கு முன்பே பரவி வந்ததாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில், இவ்வைரஸினால் 260 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் சுமார் 1,000 பேர் எபோலாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.பி.சி




