ஜனசக்தி லைஃப், அதன் மொத்த எழுதப்பட்ட பிரீமியங்களில் 42% வளர்ச்சியுடன் ரூ.2.6 பில்லியனை பதிவு செய்து சந்தை மூலதனத்தில் 70% அதிகரிப்புடன் முன்னேறுகின்றது.
காப்புறுதித் துறையில் முன்னணி நாமமும் JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தக நாமமுமான ஜனசக்தி லைஃப், 2026 நிதியாண்டை வலுவான செயல்திறனுடன் ஆரம்பித்துள்ளது. முடிவடைந்த மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் முக்கிய நிதி மற்றும் செயல்பாட்டுக் குறிகாட்டிகள் வலுவான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளன. நிறுவனம், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க 42% வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், ரூ.2.6 பில்லியன் மொத்த எழுதப்பட்ட பிரீமியங்களைப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்ச்சியான சந்தைத் தேவை, வலுப்படுத்தப்பட்ட விநியோக வலையமைப்பின் திறன் மற்றும் ஜனசக்தியின் காப்புறுதி தீர்வுகளின் மீதான வாடிக்கையாளர்களின் நிலையான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
மதிப்பாய்வுக்குட்பட்ட காலத்தின் முடிவில், நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு முன்னைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.17 பில்லியனிலிருந்து ரூ.29 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது, பங்குதாரர்களுக்கு முக்கிய மதிப்பை உருவாக்கியதன் பின்னணியில், முதலீட்டாளர்களின் உயர் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இதனுடன், பங்கு விலை 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.73.6 இலிருந்து 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.127.7 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், சந்தை மூலதன மதிப்பு பங்குதாரர் பங்கு முதலின் 1.72 மடங்காக பதிவாகியுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை அறிக்கை மேலும் வலுப்பெற்று, மொத்த சொத்துக்கள் ரூ.41 பில்லியனாக உயர்ந்துள்ளன. இது உறுதியான நிதி அடித்தளத்தையும் நீண்டகால வளர்ச்சியை நிலைநிறுத்தும் திறனையும் மேலும் விரிவுபடுத்துகிறது.




