அவசரமாகத் தரையிறக்க முயன்ற போது தனியார் ஜெட் விமானம் விபத்து

1 Min Read

டொமினிக்கன் குடியரசில் உள்ள லா ரோமனா சர்வதேச விமான நிலையத்தில் (La Romana International Airport) அவசரத் தரையிறக்க முயற்சியில் ஈடுபட்ட தனியார் வணிக ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதுச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்துக்குள்ளான இந்த விமானம் 2004 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘கல்ஃப்ஸ்ட்ரீம் G200’ (Gulfstream G200 – பதிவு எண்: N318JF) ரக விமானமாகும்.

விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, லா ரோமனா சர்வதேச விமான நிலையத்தில் அதனை அவசரமாகத் தரையிறக்க விமானிகள் முயன்றுள்ளனர். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தில் மோதி பலத்த சேதங்களுக்குள்ளாகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தில் பயணித்தவர்களின் விபரங்கள் மற்றும் இந்த விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த மேலதிக விபரங்களை விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *